Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

அன்ரனி புரம் சிறுவர் முன்பள்ளிக்கு உதவி

Friday 19th May 2017 07:01 AM

Anthony Puram Children's Pre-School

  
வலிகாமம் வடக்கிலிருந்து  இரானுவத்தால் வெளியேற்றப்பட்டு 26 வருடங்களின் பின் மீண்டும் சொந்த மண்ணில் மீள் குடியேறிய பலாலி வடக்கு  அன்ரனி புரம் கிராமத்தில் உள்ள சிறுவர் முன்பள்ளி போதிய வளபற்றாகுறையுடன் இயங்கி வருகிறது.

 

சுமார் 30 முன்பள்ளி மாணவர்கள் கல்விகற்று வரும் இக் கிராமத்தில் முன்பள்ளி கட்டிடங்கள் இன்றி , தளபாட வசதிகள் இன்றி தற்காலி குடிசையில் இயங்கி வருக்கின்றது. மீள் குடியேறிய பிரதேசமாக இருந்தும் எதுவித வசதிகளும் செய்து கொடுக்கபடமால் இருந்து வருக்கின்றது. இக் கிராமத்தில் மீள் குடியேறிய மக்களால் மாணவர்களின் கல்விக்கான தேவைகள் தொடர்பாக பிரதேச செயலகம் , மீள் குடியேற்று அமைச்சு , அரசியல்வாதிகள் வேண்டுகோள் விடுக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கபடவில்லை.

 இக் கிராமத்தில் இயங்கும் தாய்மார் கழகம் முன்பள்ளி மாணவர்களின் கற்றல் செயற்பாட்டுக்கான தேவைகள்  தொடர்பாக என்னிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க 30 மாணவர்களுக்கும் ஆன கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. மயிலிட்டியிருந்து புலம்பெயர்ந்து சுவிஸ்சர்லாந்து யேனிவாவில் வசிக்கும் திருமதி.தர்சிகா தம்பதிகள் தங்களது மகன் சந்தோசின் 4வது பிறந்தநாளை முன்னிட்டு இதற்கான நிதியினை  வழங்கியுள்ளனார்.