Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

வித்தியாவின் படுகொலை

Thursday 20th Apr 2017 23:34 PM

விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.  யாழ். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில், பதில் நீதவான் ஆர்.சபேசன் முன்னிலையில் சந்தேகநபர்கள் 12 பேரும் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.  இதன்போது, எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.   புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.............