Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

மாற்றுவலுச் சிறார்களுக்கு நான்கு இலட்சத்து அறுபத்தேழாயிரம் உதவி.

Wednesday 19th Apr 2017 17:01 PM

விவசாயச் செய்கைப் பணிகளுக்காக, நோர்வே, ஒஸ்லோவில் வைத்வெத் தமிழ்ப் பாடசாலை பெற்றோர்களால் நடத்தப்பட்டு வருகின்றன

நோர்வே ஒஸ்லோ(வைத்வெத்) உறவுகளால் வன்னியின் மாற்றுவலுச் சிறார்களுக்கு நான்கு இலட்சத்து அறுபத்தேழாயிரம் உதவி.

ஈழத்தின் வன்னியில் மாற்றுவலுச் சிறார்களுக்கு வாழ்வளிக்கும் இனிய வாழ்வு இல்லத்தின் பணிகளை ஈடேற்றுமுகமான விவசாயச் செய்கைப் பணிகளுக்காக, நோர்வே, ஒஸ்லோவில் வைத்வெத் தமிழ்ப் பாடசாலை பெற்றோர்களால் நடத்தப்பட்டு வருகின்றன சிற்றூண்டிச்சாலை நிர்வாகத்தின் அன்பளிப்பாய், நான்கு இலட்சத்து அறுபத்தேழாயிரம் ரூபாய் பெறுமதியான விவசாய உழவு இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.வேதநாயகன் அவர்கள் இவ்வுபகரணத்தை கையளித்தார். நோர்வே உறவுகளின் இப்பணி குறித்த விளக்கத்தை யோ.புரட்சி வழங்கினார். இனிய வாழ்வு இல்லத்தின் தலைவர், முகாமையாளர், இல்லச் சிறார்கள், நிர்வாகத்தினர் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்...............