Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

பவராஹா இசைக்கலையகத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழா

Wednesday 19th Apr 2017 16:58 PM

ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் தனித்துவம் மிக்க 'பவராஹா இசைக்கலையகம்'

யாழ்ப்பாணத்தில் நன்றே நிறைவேறிய பவராஹா இசைக்கலையகத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழா
ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் தனித்துவம் மிக்க 'பவராஹா இசைக்கலையகம்' தன்னின் நான்காவது ஆண்டு விழா 19.04.2017 புதன்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு யாழ் நகரில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு தேசிய சேமிப்பு வங்கியின் உதவி முகாமையாளர் திருமதி ரதினி விமலராஜா அவர்கள் தலைமை வகித்தார். பிரதம விருந்தினர்களாக மூத்த ஊடகவியலாளர் மு.விவேகானந்தன், வற்றாப்பளை மகா வித்தியாலய பிரதி அதிபர் திருமதி சாந்தகுமாரி கமலநாதன் அவர்கள், பிரான்ஸ் திரு.திருமதி இராஜேஸ்வரன் அவர்கள், யோ.புரட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கலையகத்தில் பயிலும் மாணவர்களின் இசை, நடனம், வாத்திய இசை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அரங்கை நிறைத்தன. கலந்துகொண்ட விருந்தினர்கள் உரை நிகழ்த்தினர். மாணவர்கள், விருந்தினர்கள் யாவருக்கும் நினைவுப்பரிசில் வழங்கப்பட்டது. இக்கலையகத்தின் இயக்குநர் தர்சிகா(மேனகா இராசரத்தினம்) அவர்கள் அனைத்து விடயங்களையும் நெறியாள்கை செய்து நிகழ்ச்சிகளை நிறைவுபட நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது...........