Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

மனவருத்தம் அடைகின்றேன்..........முதலமைச்சர்

Wednesday 19th Apr 2017 14:45 PM

" இதில் அரசியல் கலந்திருப்பதாகவே நான் உணர்கின்றேன்"

  ஈழதேச மக்களின் இறைதூதராக ஈழதேச மக்களால் அடையாளம் காணப்பட்ட நீதியரசரும் வடமாகாண முதலமைச்சருமான க.வி.விக்னேசுவரன் அவர்களினால் வழங்கப்பட்ட செவ்வியில் திரிபுபடுத்தப்பட்டு நன்கு திட்டமிடப்பட்டு எமது கிறீஸ்தவ மதத்தைச் சேர்ந்த தமிழ்த் தேசிய மக்களுக்கு ஏற்பட்டிருந்த சந்தேகங்களுக்குரிய தன்னிலை விளக்கத்தில் முதலமைச்சர் தெரிவித்திருப்பதாவது...

1958 ஆம் ஆண்டு றோயல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது Gospel according to st Mathew என்ற கிறீஸ்தவ பாடத்தில் சமய ஒப்பீட்டுச் {Comparative Relligion} சோதனையில் முதல் பரிசு பெற்றவன், அனைத்து மதங்களையும் அனுசரித்து போற்றி வருபவன், யேசு கிறீஸ்துவை இறை தூதராக ஏற்று பணிந்து வருபவன், வருடா வருடம் கொழும்பில் St Antony feast காலத்தில் சென்று வணங்கி வருபவன் எனவும் தொடர்கின்ற அறிக்கை ...

குற்றவாளி ஒருவரை எவ்வாறு கடவுளாக ஏற்கலாம்? என என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு முன்னுதாரணம் கூறினேனே தவிர ஜேசு கிறீஸ்துவின் வாழ்க்கையையும் பிரேமாநந்தரின் வாழ்க்கையையும் எந்த விதத்திலும், எக்காலகட்டத்திலும் ஒப்பிட்டு பேசவில்லை என்றும் விமர்சனம் செய்தவர்களால் மட்டும் தான் அது ஒப்பிட்டு பேசப்படுகின்றது என்றும் தொடர்கின்ற அறிக்கை...

கிறீஸ்தவ மக்களினது மனங்களை உண்மையில் புண்படுத்திவிட்டதென்றால் அதற்காக நான் மனவருத்தம் அடைகின்றேன் எனவும் ஆனால் மனவருத்தம் அடைகின்ற விதத்தில் எதுவும் கூறியிருக்கவில்லை என்பதே எனது வாதம் எனவும் தொடர்கின்ற அறிக்கையின்
இறுதியில்...

" இதில் அரசியல் கலந்திருப்பதாகவே நான் உணர்கின்றேன்" எனக் கூறி உண்மை நிலையையும் அறிக்கை தொட்டுச் சென்றிருக்கின்றது.

Image may contain: 1 person, beard and eyeglasses