Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

புலிகள் பாரிய நிதிகளை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சி

Monday 17th Apr 2017 18:03 PM

இவ்வாறு கொண்டுவரும் பட்சத்தில், பிணைமுறி விவகாரம் போன்று, பல பாரதூரமான மோசடிகள் இடம்பெறக் கூடும்.

புலம்பெயர் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களின் பாரிய நிதிகளை மத்திய வங்கி மூலம் இல்லாமல் வேறு வழிகளில் நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சி செய்கின்றது.

இவற்றை அடிப்படையாக கொண்டே அரசாங்கம் நாணய மாற்று கட்டுப்பாட்டு திருத்த சட்டத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக பந்துல குணவர்தன குற்றம் சாட்டியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

மத்திய வங்கியின் நிதி தொடர்பிலான நடவடிக்கைகளில் சுயாதீனத் தன்மையை அரசாங்கமானது அரசியல் மயமாக்குவதற்கு முயற்சித்து வருகின்றது.

இவ்வாறு மத்திய வங்கியின் நாணயமாற்று விடயங்கள் அனைத்தும் தற்போது ஒரு அமைச்சரின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொண்டுவரும் பட்சத்தில், பிணைமுறி விவகாரம் போன்று, பல பாரதூரமான மோசடிகள் இடம்பெறக் கூடும்.

நல்லாட்சி அரசாங்கமானது பதவி ஏற்றதும் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சோல்ஹெய்ம்,

“இலங்கையின் சிறந்த முதலீட்டாளர்கள் சீனா இல்லை, மாறாக புலம்பெயர் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் பலரின் நிதிகள் வெளிநாடுகளில் உள்ளது, அவ்வாறு இருக்கும் நிதி அனைத்தையும் நாட்டுக்கு கொண்டு வருவதற்குரிய ஏற்பாடுகளை விரிவாக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

அவர் குறிப்பிட்டதைப் போல நாட்டுக்குள் அந்த நிதிகளை கொண்டு வருவதற்காக அரசாங்கம் மத்திய வங்கியின் சுயாதீன தன்மையை அரசியல் மயமாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.