Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

யாழ் கல்வியங்காட்டில் இளைஞன் மீது வாள் வெட்டு!

Tuesday 10th Jan 2017 04:43 AM

கல்வியங்காடு விளையாட்டு அரங்க வீதியில் இளைஞர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினர் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிசென்று உள்ளனர்.

யாழ்ப்பாணம் கல்வியங்காடு விளையாட்டு அரங்க வீதியில் இளைஞர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினர் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிசென்று உள்ளனர்.

கோப்பாய் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள புலவனார் வீதியால் குறித்த இளைஞர் நேற்று பயணித்துக்கொண்டிருந்த வேளை மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு நபர்கள் இளைஞரை வழி மறுத்து தாக்கியுள்ளனர்.

தாக்குதலாளிகளிடமிருந்து தப்பித்த இளைஞர் விளையாட்டரங்கு வீதி வழியாக தப்பியோடிவேளை தாக்குதலாளிகள் துரத்தி துரத்தி மூர்க்கத்தனமாக வாளினால் வெட்டியுள்ளனர்.  வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.