Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

கொள்ளுபிட்டியில் விபசார விடுதி சுற்றிவளைப்பு

Wednesday 13th Sep 2017 17:25 PM

காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

கொள்ளுபிட்டி பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட விபசார விடுதியொன்று முற்றுகையிடப்பட்டு, அங்கிருந்த 7 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் இந்த விபசார விடுதி நடத்திச் செல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்று மாலை இந்த முற்றுகை இடம்பெற்றுள்ள நிலையில், அங்கு முகாமையாளராக செயற்பட்ட பெண்ணொவரும் அதற்கு உதவிய நபரொருவரும், விபசாரத்தில் ஈடுபட்ட 5 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் 61 வயதானவர் என்பதுடன், முகாமையாளராக செயற்பட்ட பெண்ணுக்கு 55 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பெண்கள் 26, 28,32, 37, 49 வயதானவர்கள் என தெரியவந்துள்ள நிலையில், இவர்கள் கந்தானை, பண்டாரவளை, பிலியந்தலை, பன்னிபிட்டிய மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கொள்ளுபிட்டி காவல்துறை இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.