Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

"சரத் பொன்சேகா அப்படி பேசியிருக்கவே கூடாது'

Tuesday 12th Sep 2017 17:07 PM

ஊடகங்களிடம் மகிந்த கருத்து

"சரத் பொன்சேகா அப்படி பேசியிருக்கவே கூடாது'' - ஊடகங்களிடம் மகிந்த கருத்து

முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவைப் பற்றி அமைச்சர் சரத் பொன்சேகா பேசியிருக்கக் கூடாது.

இவ்வாறான காட்டிக் கொடுப்புகள் மூலம் சமூகம், நாடு மற்றும் யுத்தத்தின் முடிவுகள் குறி த்து குழப்பமான நிலை ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம், ஜயஸ்ரீ மகா விகாரைக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அவர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா கருத்து தெரிவிப்பதால் அதில் உண்மை இருக்கலாம் என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார்.

அவருக்கும் அதில் சந்தேகம் எழுந்துள் ளது. இராணுவத் தளபதியொருவர் இவ்வாறான கருத்தை வெளியிட்டிருக்கக் கூடாது என்றே நான் கருதுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

வட மாகாண முதலமைச்சர், தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பது தொடர்பில் ஊட கவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப் பியுள்ளனர்.

அதற்குப் பதிலளித்த மகிந்த ராஜபக்ஷ, அது அவர்களின் உரிமை. அந்த மக்களை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். எம்மவர்களுக்கு அதனை விளங்கிக் கொள்ள முடியாமல் போய்விட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.