Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

மாணவர்களை மீட்குமாறு கனடா அரசுக்கு கோரிக்கை

Tuesday 12th Sep 2017 16:49 PM

25 வரையான கனேடிய மாணவர்கள்

கரீபியன் தீவுகள் மற்றும் கியூபாவை இர்மா சூறவாளி கடுமையாக தாக்கியுள்ள நிலையில், அமெரிக்க பல்கலைக்கழக கரிபியன் பாடசாலையில் சிக்கியிருக்கும் மாணவர்களை மீட்குமாறு கனடா அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இர்மா சூறாவளி St. Maarten-ஐ தாக்குவதற்கு முன்னர் அங்கிருந்து தப்பிச்சென்ற மருத்துவ மாணவர்கள் சிலர், பல்கலைக்கழகத்தில் சிக்கியிருக்கும் ஏனைய சக மாணவர்களை கனடாவிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.

இர்மா சூறாவளியிலிருந்து தப்பித்துக்கொள்ளும் நோக்கில் அமெரிக்க பல்கலைக்கழக கரிபியன் பாடசாலையில் பயிலும், கல்கரியை சேர்ந்த டுலானி சமரபுலி உள்ளிட்ட கனேடிய மாணவர்கள் ஐவர் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் செவ்வாய்கிழமை ரொறொன்ரோ சென்றுவிட்டனர்.
எவ்வாறாயினும், கரீபியன் தீவு நேரடியாக இர்மா புயலினால் தாக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர்.
இவ்வாறு சிக்கியுள்ள மாணவர்களில் கனடாவில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த சிங்கள மற்றும் தமிழ் மாணவர்களும் இருப்பதாக சொல்லப்படுகின்றது.
இந்நிலையில், பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ள சமரபுலி மற்றும் அதே பாடசாலையை சேர்ந்த 25 வரையான கனேடிய மாணவர்கள் இணைந்து கரீபியன் தீவில் சிக்கியுள்ள ஏனைய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக இணையத்தில் மனு ஒன்றை தயார் செய்து 500க்கும் மேற்பட்ட கையொப்பங்களையும் பெற்று, கனேடிய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
கனேடிய மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இன்மை போன்ற இன்னல்களிலிருந்து அவர்களை பாதுகாக்க கனேடிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.