Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

மழையுடன் கூடிய காலநிலை

Tuesday 12th Sep 2017 02:24 AM

இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டின் தற்பொழுது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை இன்றிலிருந்து எதிர்வரும் 14ம் திகதி வரை தொடர்ந்து நீடிக்கக்கூடுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ மாகணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்யும்.
நாட்டின் பல பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பிற்பகல் 2.00 மணியின் பின்னர் பெய்யும்.
குறிப்பாக கிழக்கு மாகாணம் மற்றும் காலி , மாத்தறை, இரத்தினபுரி, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் மணிக்கு சுமார் 75 மில்லிமீற்றர் கன மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை மற்றும் திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவினூடாக காங்கேசன்துறை வரையிலான கரையோரத்திற்கு அப்பாலான கடல் பிரதேசத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழையின்போது இந்த பிரசேதங்களில் தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும். இடி மின்னல் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்று திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.