Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

வீரமுனைப் படுகொலையின் 27 ஆவது ஆண்டு நிறைவு!

Sunday 13th Aug 2017 08:59 AM

Veeramunai assassination

அம்பாறை வீரமுனையில் 232 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 27வது ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்து வீரமுனை சிந்தா யாத்திரை பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

உயிர் நீத்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுடன், பின்னர் ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

அத்துடன், கொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி ஒரு நிமிட அஞ்சலியுடன் சேர்ந்த அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

மேற்படி நிகழ்விற்கு முன்னாள் கிராம உத்தியோகஸ்த்தர் பொன்னம்பலம் தலமை தாங்கியதுடன், இந்த நிகழ்வினை வீரமுனை கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் அஞ்சலி நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான தவராசா கலையரசன், மு.இராஜேஸ்வரன், இரா.துரைரெட்ணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் கல்முனை மாநகர முன்னாள் உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார், நம்பிக்கை ஒளியின் கிழக்கு மாகாண பணிப்பாளர் ஜெயசிறில், வடக்க கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டாளர் க.லவகுகராஜா, முன்னாள் கிராம உத்தியோகஸ்த்தர் பொன்னுத்துரை மற்றும் கொலையுண்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

IMG_7067IMG_7055IMG_7053IMG_6632IMG_6627