Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

உலக சைவ இளைஞர் மாநாடு ஆரம்பம்

Saturday 12th Aug 2017 05:25 AM

World hindu Youth Conference begins

 

அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் 2017 ம் ஆண்டிற்கான உலக சைவ இளைஞர் மாநாடு இன்று இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் ஆரம்பமாகியது.

Image may contain: 1 person, standing, child and outdoor

சைவ மாநாடாட்டு ஆரம்ப நாளான இன்று நல்லூர் முன்றலில் இருந்து பேரணி ஆரம்பமாகி யாழ் நகர மைய வீதிகளினூடாக மாநாட்டு மண்டபத்தை வந்தடைந்தது. இப் பேரணியை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார்.

Image may contain: 2 people, people standing and crowd

சைவமகாசபை தலைவர் பரா.நந்தகுமார் தலைமையில் ஆரம்பமாகிய இம் மாநாட்டில் முன்னிலை விருந்தினர்களாக தமிழக பேரூர் ஆதீன இளையபட்டம் தவத்திரு மருதாசலம் அடிகளார், கோணமாமலை தென்கயிலை ஆதீன குரு மகா சந்நிதான பெருந்தலைவர் தவத்திரு அகத்தியர் அடிகளார், நெல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் கலந்துகொண்டனர்.

Image may contain: 6 people, people smiling, crowd and outdoor

மேலும் இவ் மாநாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் கஜதீபன், சைவ சமயப் பெரியார்கள், பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இம் மாநாடு தொடர்சியாக மூன்று தினங்கள் (11,12,13,) நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.