Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனைக் கண்காட்சி

Saturday 12th Aug 2017 05:21 AM

Sales Exhibition for Local Production Products

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் ஏற்பாட்டில் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனைக் கண்காட்சியை இன்று முற்பகல்10 மணியளவில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமாகியது. இக் கண்காட்சியை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நாடாவெட்டி
Image may contain: sky, tree, outdoor and nature
இக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார். யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமைமில் ஆரம்பமாகிய இக் கண்காட்சியில் பிரதம விருந்தினராக மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், சிறப்பு விருந்தினராக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு பதிப்பாளர் சுதீர ஐயரத்ன, யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரஞ்சிதமலர் மோகனேஸ்வரன், கௌரவ விருந்தினராக யாழ், சனச அபிவிருத்தி வங்கி முகாமையாளர் சுப்ரமணியம் சபேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Image may contain: 6 people, people smiling, people standing, crowd and outdoor
இக் கண்காட்சியில் யாழ் மாவட்ட உற்பத்தியாளர்களால் உருவாக்கப்பட்ட உற்பத்தி பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டன. இக் கண்காட்சியை 11,12,13ம் திகதிகளில் மு.ப 10 மணிமுதல் 7 மணிவரை பார்வையிடலாம்.

Image may contain: 4 people