Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

உயிருக்குப் போராடும் மனைவி : வெளிநாட்டில் தவிக்கும் கணவன்..!

Friday 11th Aug 2017 03:34 AM

Wife fighting for life: abroad husband!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கியுள்ள ஸ்ரீலங்கா பிரஜை ஒருவர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றார்.

ஷாந்த ராஜபக்ச என்ற 55 வயதான என்ற கப்பல் மாலுமியே இவ்வாறு சிக்கியுள்ளதாக அரபு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இவரால் குடும்பத்தைப் பார்க்க முடியவில்லை. அவர் பணியாற்றும் கப்பல் கடந்த ஒரு வருடமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கியுள்ளது. அவருக்கு சம்பளமும் இதவரை வழங்கப்படவில்லை.

கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் தனது தந்தை இறந்த போதிலும் ஸ்ரீலங்காவுக்கு இவரால் செல்ல முடியவில்லை.

தற்போது அவரது மனைவி மாரடைப்பினால் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் இவரால் இவரது மனைவியைப் பார்க்க முடியவில்லை. இருப்பினும் ஸ்ரீலங்கா செல்லும் நாட்களை எண்ணிக் காத்திருக்கின்றார்.

அவரது இந்திய நண்பர்கள் ஆறு பேர் அவருடன் அந்த கப்பலில் ஒரு வருடத்தை செலவழித்துள்ள நிலையில் கடந்த மாதம் அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். எனினும் 55 வயதான ராஜபக்ச இன்னமும் நாடு திரும்ப முடியாமல் காத்திருக்கின்றார்.

2016 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் இந்தக் கப்பல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளதுடன் மாலுமிகளுக்கு எந்தவித சம்பளமும் வழங்கப்படாத நிலையில் உணவு, நீர் மற்றும் எரிபொருள் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.