Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

சரசாலையில் தலையெடுக்கும் ரவுடிக் கும்பல்

Friday 11th Aug 2017 03:25 AM

Gangs will emerge in Sarasalai

கடந்த 9.8.2017 இரவு தரம் 10 ஐ சேர்ந்த இரு மாணவர்களும் தரம் 8 ஐ
சேர்ந்த ஒரு மாணவருமாக தனிப்பட்ட வகுப்பை முடித்துக்கொண்டு
சரசாலை பருத்தித்துறை வீதி ஊடாக தமது வீடு நோக்கி பயணித்துக்
கொண்டிருந்த பொழுது தாரா கடையடியில் கூடிநின்ற சரசாலையை சேர்ந்த
ரவுடிக் கும்பலால் காரணமின்றி தாக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு மாணவன்
காயமடைந்ததுடன் ஏனையோர் சிதறி ஓடி அருகில் உள்ள தாரா கடையில்
பதுங்கிக் கொண்டனர்.
பெற்றோர் அவ்விடத்திற்கு வந்து அவர்களை பாதுகாப்பாக அழைத்துச்
சென்றதுடன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்தனர்.
இதில் முக்கிய பங்குவகித்த கம்மாலை நடத்துபவரின் தாயார் குறித்த
மாணவர்களின் வீடுகளிற்கு சென்று பொலிஸ் முறைப்பாட்டை
மீளப்பெறாவிடின் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என
அச்சுறுத்தியதுடன் குறித்த சம்பவம் இடம்பெற்ற தாரா கடை
உரிமையாளரும் அச்சம் காரணமாக தாக்குதல்தாரிகளை நன்கு அறிந்தும்
தன்னால் இனம் காண முடியவில்லை என பொலிஸாரிற்கு
தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களிற்கு முன்னர் கனகன்புளியடி சந்தியில் இடம்பெற்ற
வாள்வெட்டு சம்பவத்தின் சூத்திரதாரிகள் என நம்பப்படும் மேற்படி
தாக்குதலாளிகள் மீது பொலிஸார் காட்டிவரும் மெத்தனப் போக்கு
பொதுமக்களிடையே அச்சத்தை தோற்றுவித்துள்ளது. குறித்த கம்மாலையில்
வாள்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் கஞ்சா வியாபாரம்
நடைபெற்றுவருவதாகவும் பரவலாக நம்பப்படுகிறது.
சாவகச்சேரி பொலிஸாரிற்கும் இவ் ரவுடிக் கும்பலிற்குமிடையே இரகசிய
தொடர்புகள் இருப்பதாலேயே இவர்கள் சுதந்திரமாக செயற்பட முடிவதுடன்
பொதுமக்களை அச்சுறுத்தவம் முடிகின்றது என பொதுமக்களிடையே கருத்து
நிலவுகின்றது.