Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

படித்ததில் பிடித்தது

போராளிகளும் மரங்களும்

Thursday 20th Apr 2017 23:08 PM

கண்டு வியக்கின்றோம்

போராளிகளும் மரங்களும்
----------------------------------------
நம் தேசத்தின்
காவல்
தெய்வங்களே
உங்களைத்
தாங்கியே
நாம் நிற்கின்றோம்

வாழ்ந்தாலும்
வீழ்ந்தாலும்
எத்தனை வலிமை
உங்களுக்கு

ஈழத்தில் பிறந்தவர்கள்
போலே
முளைத்தவர்களும்
இருப்பதால்த்தான்
வீழ்ந்தோரை
விட்டு விட்டு
சினவர் அஞ்சி
ஓடுகின்றனர்

நாம் குண்டு பட்டு
வீழ்ந்து
விட்டாலும்
உடலின் கீழிருந்து
குண்டு வெடிக்கும்

வட்டிழந்து போனாலும்
கிளைகள் முறிந்து
வீழ்ந்தாலும்
உங்களில் எஞ்சியவை
அன்னியன் ஏவுவதை
நின்றெதிர்க்கும்

எங்கள் மன
உறுதிபோலே
எதை ஏவினாலும்
எதிர்த்து நிற்கும்
உங்கள் உறுதி
கண்டு
வியக்கின்றோம்

எங்கள் கூராயுதங்களால்
உங்களைத்
துண்டு துண்டாய்
வெட்டிப் போடும்
போதெல்லாம்
துரோகம் இழைப்பதாய்
மனம் கனக்கும்

தேவை ஏற்படும்போது
நாங்களும்
துண்டுதுண்டாய்ப்
போகப்
போகின்றவர்கள்
எனும் நினைவு
வந்ததைத் தடுக்கும்

நாம் உங்களைச்
சாய்த்துவிட்ட
போதும்
காப்பரனாய் எழுந்து
நின்றெம்மைக்
காப்பதைக்
காணுகையில்

எங்கள்
சுடுகரங்களும்
உங்களைத்
தொட்டு வணங்கும்

முதல் குண்டு
தொட்டு
முடியும்வரை
உங்களுக்கு
ஏதேனும் உங்களைத்
தாண்டினால்த்தான்
எங்களுக்கு

பகைவன் தொடுக்கும்
ஒவ்வொரு
போரிலும் நம்மை
ஜெயிக்கவைத்தது
நீங்களென
நாம் குருதி சிந்தாத
ஒவ்வொரு போர்
முனையும் சொல்லும்!

-பிரியமுடன் கி.தீபன்! (2009)

Image may contain: one or more people and outdoor