Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

படித்ததில் பிடித்தது

•ஈழத் தமிழர்கள் “பீனிக்ஸ்” பறவைகளா?

Monday 11th Sep 2017 03:18 AM

இனம் மீண்டும் எழுந்துவிட முடியாது

•ஈழத் தமிழர்கள் “பீனிக்ஸ்” பறவைகளா?

எரிந்த சாம்பலில் இருந்து உயிர்தெழும் வல்லமை கொண்ட பீனிக்ஸ் பறவைகள் என்று கூறுகிறார்கள்.

அப்படி ஒரு பறவை நிஜத்தில் உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் பீனிக்ஸ் பறவைபோல் ஒரு மனித இனம் உண்டு என்று கூறலாம்.

கிளிநொச்சியில் தெருவோரத்தில் ஒரு செருப்பு தைக்கும் கடையை வைத்திருந்தார் மகேந்திரன் என்ற தமிழர்.

சில வாரங்களுக்கு முன்னர் விசமிகள் அவரது கடையை எரித்துவிட்டனர். அவரது வருமானத்தை மட்டும் நம்பியிருந்த குடும்பம் செய்வதறியாது திகைத்தது.

ஆனால் தனது உழைப்பில் மட்டுமே நம்பிக்கை கொண்ட மகேந்திரன் துவண்டு விடவில்லை.

சில உணர்வுள்ள தமிழர்களின் உதவியுடன் மீண்டும் அதே தெருவோரத்தில் தனது கடையை ஆரம்பித்து விட்டார்.

அதேபோல் கனடாவில் திருமதி யோகரட்ணம் செல்லையா முதுகலைமாமணி பட்டம் பெற்று சாதனை செய்துள்ளார்.

80 வயதான இந்த பெண்மணி கனடாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து இந்த பட்டத்தைப் பெற்றுள்ளார்.

அவர் விரும்பியிருந்தால் பென்சன் எடுத்துக்கொண்டு ஊர்க் கதைகள் பேசி கொண்டு நேரத்தைக் கழித்திருக்கலாம்.

ஆனால் அவரோ நாடு விட்டு நாடு சென்றிருந்தாலும் 80 வயதில் படித்து பட்டம் பெற்று இளையோருக்கு ஒரு உதாரணத்தைக் காட்டியிருக்கிறார்.

இரண்டு நாளில் 40 அயிரம் மக்களை கொலை செய்தால் அந்த இனம் மீண்டும் போராட முடியாது என்று மகிந்த ராஜபக்ச நினைத்தார்.

மகிந்த ராஜபக்ச மட்டுமல்ல இந்தியா உட்பட பல வல்லரசுகள் ஈழத் தமிழ் இனம் மீண்டும் எழுந்துவிட முடியாது என்று நினைத்தன.

ஆனால் ஈழத் தமிழர்கள் எரிந்த சாம்பலில் இருந்து உயிர் பெற்று வரும் பீனிக்ஸ் பறவைபோல் மீண்டும் எழுந்து நிற்போம்; என்பதை நிரூபித்து வருகிறார்கள்.


கிளிநொச்சியில் கந்தசாமி மகேந்திரன் என்பவரின் காலணி தைக்கும் தொழிலாளியின் கொட்டகையே எரிப்பு!
நான்கு பிள்ளைகளின் தந்தை, தானும் தனது வேலையும் என இருந்தவா். பிஞ்சு போன தறப்பால் துண்டுகளாலும், கிழிந்து போன குடையின் துண்டுகளாலும் ஒரு கொட்டகையை அமைத்து நாளாந்தம் காலணிகள், பைகள், குடைகள் என்பவற்றை தைத்து அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு மூன்று பிள்ளைகளின் படிப்புச் செலவு வாழ்க்கைச் செலவு என்பவற்றை கொண்டு செல்லும் இந்த ஏழைத் தொழிரலாளியின் கொட்டகை எரிக்கப்பட்டுள்ளது
தனது தொழிலை மீளவும் ஆரம்பிக்கவும், பொருட்களை பெற்றுக்கொடுக்கவும் ஓரு இலட்சம் வரை தேவை எனத் தெரிவித்துள்ளாா் உதவு உள்ளங்களுக்கு அவரின் தொலைபேசி 0772967183
பீனிக்ஸாய் எரிக்கப்பட்ட தனது கடையின் சாம்பலின் மேல் தனது தொழிலை ஆரம்பித்துள்ளாா் கந்தசாமி மகேந்திரன்.வாழ்த்துக்கள் ஜயா!