Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

படித்ததில் பிடித்தது

வேட்கை ...

Monday 11th Sep 2017 03:01 AM

இனி இலக்கியத்துறைக்கு வந்து விடலாம்.

வேட்கை ...

பிள்ளையான் சிறையில் இருந்து புத்தகம் எழுதியிருக்காராம் வெளியீடு செய்கின்ற நிகழ்வாம். இப்படி சிரித்து விட்டுக் கடந்தேன் ஆனால் விமர்சனங்களை காணக் காண ஒரு ஆவல் அதை வாசிக்க வேண்டும் என்று ஓடிப் போய் ஒரு புத்தகம் வேண்டியாகி விட்டது சில பல ஒற்றைகள் பிரட்டியாகியும் விட்டது. என்ன ஒரு அற்புதம் முதல் பக்கங்களை பிரட்டும் போதே ஒரு ஆவல், குறிப்பு : நானும் அவர் அவர் மீது மிக அதிருப்தி கொண்டவன் எப்பொழுதும்.

பக்கங்களை பிரட்டும் போது ஒன்று மட்டும் நன்றாக விளங்குகின்றது சிறையில் பிள்ளையான் கம்பி எண்ணாமல் நல்ல புத்தகங்களை வாசித்து இருக்கிறார் என்பது,

சிறையில் இருந்து வெளிக்கிட்டு ஆனைப்பந்தி விநாயகர் ஆலய மணி ஓசையுடன் துடங்கி ஒரு நாள் விடுதலை பேசி மீனகத்தை மனக்கண் முன் நிறுத்தி பழைய பஸ் நிலைய நினைவுகளை மீட்டு புதிய பஸ் நிலையத்தை அமைத்த சுவடுகள் சொல்லும் பிள்ளையான் "புதிய பஸ் நிலையம் அமைத்து அதை பராமரிக்க மாநகர சபைக்காக ஒரு அறையை ஒதுக்கி அதனை கூட்ட தீர்மானம் செய்து குறிப்பு எழுதி வைத்தும் பிரயோசனம் இல்லை அவ்வளவு குப்பையாக கிடக்குது என்று வெதும்பி இதை மாற்றவும் ஒரு காலம் வரும் என்ற நம்பிக்கையை விதைத்து" தன் அரசியல் பணிகளை ஒவ்வொரு இடமாக ஊராக விபரிக்கும் விதம் நிச்சயம் இவன் பல நூறு புதினங்கள் கற்ற அனுபவத்தை உணர்த்தி நிற்கின்றது.

இதற்குள் ஆயிரம் கதைகள் அவற்றை எழுத பலநூறு பக்கங்கள் தேவை சிலவற்றைத் பதிந்து விடுவது பிள்ளையானுக்கு உயிர்,மெய் எழுத்து தெரியுமா என்று கேட்கும் சில அக்கப்போர்களுக்கு தெரிவதற்காக

பிரபாகரன் மீது சில எதிர் மறை விமர்சனம் வைத்தாலும் தலைவர் என்று பல இடங்களில் சொல்லிச் செல்லும் மாண்பு போற்றுதலுக்குரியது.எல்லைப்புற கிராமங்கள் எங்கள் கண்கள் என்று தன் எல்லைப்புற அனுபவ பதிவுகளை அற்புதமாக பதிந்து செல்லும் வேளை பொட்டு அம்மான் அவர்களை மனக்கண் நிறுத்தி அவர் எனக்கு கருணாஅம்மானின் திருமண நிகழ்வில் Ice cream தந்தார் மீண்டும் இரண்டாம் தடவையும் எடுத்து உண்டேன் என்பது சூப்பர்.

அடுத்ததாக போடும் குண்டு நெஞ்சை... உடல் பொருள் ஆவியை ஒப்படைத்து களமாடிய நினைவுகள் பகிர்ந்ததற்கு பரிசாக 63 பேரை மட்டக்களப்பில் நிற்க வைத்து சுட்டார் பொட்டு அம்மான் எனும் போது உள்ளம் நொறுங்கியது." சுட்டவர்களில் பலருடைய திருமணத்துக்கு தலைவர்தான் தாலி எடுத்துக் கொடுத்தார் இன்று அவரே அவர்களில் பலரை விதவைகளாகவும் ஆக்கி விட்டார் என்ற அவரது ஆதங்கம் ...

எலும்புகூடாக கிடைத்த ரேஜி அண்ணா ,மாவீரர் பெயரில் கலாச்சார மண்டபம், உடைத்து எறியப்பட்ட தலைவர் படங்கள் மட்டக்களப்பு வந்தால் கஜி வேண்டிக் கேட்ட நடேசன் என்று நீண்டு செல்லும் அவர் ஆக்கங்கள் உயிர் துடிப்புமிக்கவை .

மிக முக்கியமாக கருணா பிரிவுக்கு முன் தன்னுடன் பேசும் போது நாம் பிரிந்து தனியாக செயல் பாடுவோம் என்று கூறிய போது " நன்றாக யோசித்து செயல்படுங்கள் அப்படி ஒன்று நடந்தால் தமிழீழம் என்பது எப்போதும் நமக்கு வெறும் கானாவாகவே இருந்து விடும் ஏதோ உங்கள் முடிவு நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் உங்களோடு இருப்பேன் என்று கருணாவிடம் குறியதாகாவும், பின்பு வேறு ஒரு இடத்தில், யுத்தம் நடைபெற்ற போது கிழக்குக்கு ஒரு தடவை கூட வராதவர்கள் இப்போது வந்து வாகரைக் காட்டில் ஆடிய கொலை வெறியையும்,பாலியல் துஸ்பிரயோக செயல் பாடுகளை பார்த்த பின்புதான் இனி கிழக்கில் இருந்து இவர்களை அடியோடு அகற்ற வேண்டும் என்ற எண்ணம் தீயை போல் உருவாகியது என்ற அவரின் உள்ளக்குமுறல் ... கொஞ்சம் சிந்திக்கத் தூண்டியது.

ஒரு குழந்தைப் போராளியாகஆரம்பித்து ஒரு கெரில்லாத்தளபதியாக,அரசியல் கட்சி ஒன்றின் ஸ்தாபகனாக,முதலமைச்சராக,ஒரு அரசியல் தலைவனாக,ஒரு சிறைக்கைதியாக என பல பரிணாமம் பெற்று நிற்க ... ஒரு குழந்தைப் போராளியை முதலமைச்சர் ஆக்கி புகழ்பெற்ற கிழக்கு மண் அதே குழந்தைப் போராளியை இன்று எழுத்தாளன் ஆக்கியும் தந்திருக்கின்றது.

என்னதான் நாம் அவர் மீது விமர்சனக்கணைகளை தொடுத்தாலும் சந்திரகாந்தன் எனும் பிள்ளையானின் நாமம் ஈழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் ஒரு வரியிலாவது இடம் பெறுவது திண்ணம்.

குறிப்பு : நாம் எந்த கட்சியை சேர்ந்தவராகவும் இருக்கலாம் எங்கள் உணர்வுகள் பெறுமதியானதும் கூட முடிந்தால் இந்த புத்தகத்தை வாசித்துக் கொள்ளுங்கள் ஏன் எனில் களத்தில் நின்ற இப்படியான வீரனோ,துரோகியோ அவர்கள் நினைவுகள் உண்மையை உரத்துச் சொல்பவை. என்னைப் பொறுத்தவரை நீங்கள் பேசாமல் இனி இலக்கியத்துறைக்கு வந்து விடலாம்.
(கு.உமாறமணன்.)