Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மண்ணின் மைந்தர்கள்

புத்தர்

Tuesday 18th Apr 2017 23:43 PM

சிந்திக்க தூண்டுவது. தேடலை ஊக்கிவிப்பது கேள்வி கேட்க வைப்பது!

ஒரு நாள் புத்தரிடம் ஒருவன் வந்தான்,

"புத்தா நீங்கள் சொல்வதுதான் சரி. அதையே நானும் சொல்கிறேன். கடவுள் என்று ஒருவர் இல்லவே இல்லை. ஆனால் இந்த மோடைச் சனத்துக்கு இது விளங்குதில்லை"

புத்தர் சொன்னார்,

"நான் எங்கே சொன்னேன், கடவுள் இல்லை என்று? நீ இங்கு இருப்பது எவ்வளவு உண்மையோ, கடவுள் இருக்கிறார் என்பதும் அவ்வளவு உண்மை."

அவன் போய்விட்டான்.

ஆனால் எப்போதும் புத்தரின் அருகே இருக்கும் ஆனந்தாவுக்கு (புத்தரின் ஒன்றுவிட்ட அண்ணன்) குழப்பம். கடவுள் என ஒருவர் இல்லை என்று புத்தர் பலதடவை சொன்னதை ஆனந்தா தன் காதால் கேட்டிருக்கிறார். "அவரா இப்ப இப்பிடி சொல்றது?" ஆனாலும் புத்தரிடம் அதுபற்றி ஒன்றும் கேட்காமலே இருந்தார்.

கொஞ்ச நாள் கழித்து இன்னொருவன் புத்தரிடம் வந்தான்,

"புத்தா நீங்கள் கடவுள் இல்லை என்று சொல்வது தவறு. கடவுள் என்று ஒருவர் இல்லாமல் எப்படி இவ்வளவும் நடக்கும். கடவுள் இருக்கிறார் என்பதுதான் சரி" என்றான்.

புத்தர் கேட்டார்,

"நீ கடவுளை கண்டியா? அல்லது கடவுளை நேரில் கண்டவர் யாரையும் கண்டியா? காணாத ஒன்றை எப்படி இருக்கிறதெனச் சொல்ல முடியும்? நீ இங்கு இருப்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை கடவுள் இல்லை என்பதும்"

அவனும் போய்விட்டான்.

ஆனந்தாவுக்கு மேலும் குழப்பம். ஆனாலும் புத்தரிடம் அதுபற்றி ஒன்றும் கேட்கவில்லை.

கொஞ்ச நாள் கழித்து இன்னொருவன் வந்தான்,

"புத்தா, இதெல்லாம் என்ன? கடவுள் என்கிறார்கள், தியானம் என்கிறார்கள், நிர்வாணா என்கிறார்கள்... எனக்கு எதுவுமே விளங்குதில்லையே..."

புத்தர் எதுவுமே பேசவில்லை. அவன் தலையில் தன் திருக்கரத்தை வைத்தார்.

அவன் புத்தரின் பாதங்களை தொட்டு வணங்கினான். அவன் திரும்பிப் போகவேயில்லை.

ஆனந்தாவுக்கு மண்டைக்குள்ளாலை போச்சிது. இதுக்கு மேலையும் கேட்காமல் இருக்க முடியாதென்று புத்தரிடம் தன் குழப்பத்தை தெரிவித்தார்.

புத்தர் சொன்னார்,

"முதலாவது வந்தவன் மேதாவி. அவன் தன்னுடைய ஈகோவுக்கு என் ஆதரவை தேடி வந்தான். இரண்டாவது வந்தவன் முட்டாள். அவன் யாரோ சொன்னதை அப்படியே நம்புகிறான். இந்த இரண்டு பேரும் உண்மையை ஒருகாலமும் அறிய மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் முடிவான முடிவுகளோடு இருக்கிறார்கள் - சொந்த அனுபவம் இல்லாமலே. கடைசியாக வந்தவன் தேடுபவன். அவனிடம் ஈகோவும் இல்லை. முட்டாள்தனமும் இல்லை. கடவுள் இருக்கிறாரோ இல்லையோ அவனாகவே அறிவான். அவனுக்கு மட்டுமே நான் உதவ முடியும்."

ம்...

"அறிவு" உள்ளவர்கள் செய்ய வேண்டியது...

எதையும் போதிப்பதல்ல.
எதையும் திணிப்பதுமல்ல.
எந்த கோட்பாட்டையும் நம்ப வைப்பதல்ல.
ஏதாவது ஒரு ட்ரக் ஐ போட்டு "இந்த வழியில் எல்லாத்தையும் பார்" என்று சொல்வதல்ல!

சிந்திக்க தூண்டுவது.
தேடலை ஊக்கிவிப்பது
கேள்வி கேட்க வைப்பது!

அது மட்டுமே உண்மையான அறிவார்ந்த செயல்.

எல்லாவற்றுக்கும் ரெடிமேட் பதில்களுடன் இருப்பது அறிவு அல்ல..............