Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மண்ணின் மைந்தர்கள்

கே. மோகன்குமார்

Tuesday 12th Sep 2017 20:52 PM

மூத்த கலைஞர்களை மதித்து மரியாதை செய்பவர்.

 

தமிழ் கலைத்துறையில் 40 ஆண்டுகள் கலைப்பணி என்பது லேசான காரியம் அல்ல. அதை முழுமையாக அர்ப்பணிப்புடன் முடித்திருக்கிறார் மோகன்குமார் sir.

1976 இல் "கிருஷ்ண கலாலயம்" என்ற அமைப்பை ஆரம்பித்து எத்தனையோ நாடகங்களை மேடையேற்றி சிறப்பாக நடத்தி வந்தார். அது மட்டுமல்ல பல பயிற்சிப் பட்டறைகள், சிறப்பு விழாக்கள், பாராட்டு விழாக்கள், (நம் நாட்டின் முக்கியமான கலைஞர்கள், முக்கிய பிரமுகர்கள் காலமான வேளைகளில் அவர்களுக்கு) அஞ்சலிக் கூட்டங்கள் என எத்தனையோ பணிகளை சிறப்பாக செய்து தனிச் சிறப்புடன் கடந்த 40 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறார்.

இவர் அரச நாடக விழாக்களில் பல நாடகங்களை மேடையேற்றி சிறந்த துணை நடிகர், சிறந்த நடிகர், சிறந்த நாடகம் என பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். பல பட்டங்களை பெற்றிருக்கிறார்.

இத்தனை வெற்றிகள் கண்ட போதிலும் மூத்த கலைஞர்களை மதித்து மரியாதை செய்பவர். தன்னை ஒத்த கலைஞர்களோடு அன்னியோன்னியமாக பழகக் கூடியவர். அது மட்டுமல்ல ஆர்வம் மிக்க இன்றைய இளம் தலைமுறையினரின் திறமையறிந்து ஊக்கமளித்து அவர்களுக்குரிய சந்தர்ப்பங்களை வழங்கி அல்லது பெற்றுக் கொடுத்து நிறைய இளம் தலைமுறைக் கலைஞர்கள் உருவாக துணை புரிந்திருக்கிறார்.

மோகன்குமார் sir, எத்தனையோ சிங்களத் திரைப்படங்களுக்கு நடன இயக்குனராகவும் உதவி இயக்குனராகவும் கடமையாற்றி சிங்களக் கலைஞர்களின் அபிமானத்தை வென்றவர். சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்திரை தொடர்களில் இடம்பெற்ற நாடகங்களில் நடித்தவர்கள் முழுக்க முழுக்க நம் நாட்டுக் கலைஞர்களான போதிலும் கதை, வசனம் எழுதி இயக்கியவர்கள் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களே. சில நாடகங்களில் அவர்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றினார். அந்த தமிழ் நாட்டு இயக்குனர்களுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கி அவர்களது பாராட்டினாள் பெற்றவர்.

இத்தனை திறமைகளும் சிறப்புகளும் பெற்ற கலைஞர் எல்லோருடனும் இன்முகத்துடன் பழகும் இனிய நண்பர் நம்மை விட்டுப் பிரிந்தது பெருங் கவலையைத் தருகிறது.