Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மண்ணின் மைந்தர்கள்

லெனின்.

Monday 11th Sep 2017 02:08 AM

சர்வமயம் ஸ்டாலின் நூலிலிருந்து.

 லெனின்.

ஒரு பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு லெனின் திரும்பிய போது, திடீரென்று பான்யா கப்லான் என்னும் பெண் குறுக்கே புகுந்து லெனினை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினார். அடுத்தடுத்து மூன்று குண்டுகள், அவற்றில் இரண்டு குண்டுகள் லெனின் தோள்பட்டையில் பாய்ந்தன.

அப்படியே சுருண்டு விழுந்தார் லெனின் ஆனாலும் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால், தோளில் பாய்ந்த குண்டுகளை அகற்ற முடியவில்லை. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தக் குண்டுகளை அகற்றுவதற்காக, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை தோல்வியில் முடிந்தது.

பக்கவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டார் லெனின். உடலின் வலது பாகத்தை அசைக்க முடியவில்லை. பேசும் திறனையும் இழந்தார் லெனின். ஸ்டாலின் தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொண்டு, கட்சிப் பணிகளை தொடர்ந்தார். லெனின் சீக்கிரம் குணமாகிவிடுவார், மக்கள் கலவரம் அடையவேண்டாம் என்று மக்களுக்கு நம்பிக்கையூட்டினார்.

லெனினை பிரத்தியேகமாகக் கவனித்துக் கொண்டார் ஸ்டாலின். ஒவ்வொரு நாளும் அரசாங்கத்தில் என்ன நடந்தது, நாட்டில் நடந்த முக்கிய சம்பவங்கள் என்னென்னவென்று அருகிலிருந்து விவரித்தார். எந்ததொவொரு முடிவையும் அவரைக் கலந்தாலோசித்த பிறகே எடுத்தார்.

ஐனவரி,21,1924 அன்று லெனின் காலமானார். ரஷ்சியா, விக்கித்துநின்றது.