Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மண்ணின் மைந்தர்கள்

இளையராஜா ... தி கிரேட்..!

Saturday 09th Sep 2017 18:41 PM

காமம் தேடும் உலகிலே “ஜீவன்”

இளையராஜா ... தி கிரேட்..!
.
அவரது பெருமைக்குப் பெருமை சேர்க்கும் இன்னும் ஒரு விஷயம் .. இதோ..!
.
தான் இசையமைத்த பல பாடல்களுக்கு ,
தன் மனைவி ஜீவாவை மனதில் நினைத்தே மெட்டு அமைத்ததாக சொல்லி , தன் மனைவியை மேன்மைப்படுத்தி இருக்கிறார் இளையராஜா ..!
இதை விட வேறென்ன பாக்கியம் வேண்டும் ஒரு மனைவிக்கு .?
.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல...
“'இதயம் ஒரு கோயில்... அதில் உதயம் ஒரு பாடல்..” என்ற பாடலில் ,
“என் பாடலின் “ஜீவன்” எதுவோ அது நீயே..” என்ற வரிகளை தன் மனைவி ஜீவாவை மனதில் வைத்துத்தான் எழுதினேன்” என்று எப்போதோ ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறாராம் இளையராஜா.
.
“இதயம் ஒரு கோயில்..” என்ற இந்த பாடல்தான் , இளையராஜா எழுதிய முதல் பாடல் என்று கூகிள் கூறுகிறது.
.
இந்தப் பாடலின் ஜீவனே ... “ஜீவன்” என்ற வார்த்தையில்தான் இருக்கிறது..!
.
“இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நானும் சூட்டுவேன்...”

# இதுதான் பல்லவி... அடுத்து இளையராஜாவின் வரிகளை வாசித்துப் பாருங்கள்..!
.
“ஆத்ம ராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே
உயிரின் “ஜீவ” நாடிதான் ராகம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே

பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதில்லை
எனது “ஜீவன்” ஒன்றுதான் என்றும் புதிது....
.
காமம் தேடும் உலகிலே “ஜீவன்” என்னும் கீதத்தால்
ராம நாமன் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா
அவர் பாடலின் “ஜீவன்” அதுவே அவரானார்
என் பாடலின் “ஜீவன்” எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது...?
.
நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
எனது பாதை வேறு உனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் “ஜீவன்” எனை ஆண்டாயே
வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே...”
.
# அடேங்கப்பா...! இதற்கு மேல் ஒரு கணவன் தன் மனைவியை எப்படி சிறப்பித்துக் கூற இயலும்...?
தன் ஜீவனான மனைவி ஜீவாவை சிறப்பித்து எத்தனை ஜீவ வரிகள்...!
இளையராஜா ... தி கிரேட்..!
.
# படித்ததில் பிடித்தது ..
“ஒரு ஆண் முதுமையில் இழக்கக் கூடாத மிக பெரிய சொத்து ,
தன் மனைவி மட்டுமே...!”
.
# இளையராஜா தன் மிகப் பெரிய சொத்தான இனிய மனைவி ஜீவாவை கடந்த 2011 இல் இழந்து ,
ஜீவன் இல்லாத ராஜாவாக ஆகிப் போனார்.. ...!
.
ஆனால்..இளையராஜாவைப் பொறுத்தவரை , அவரது அன்பு மனைவி ஜீவா ,
என்றென்றும் அவரின் ஜீவனுக்குள் ஜீவனாக இருக்கிறார் என்றே தோன்றுகிறது...!
.
# “ என் பாடலின் “ஜீவன்” எதுவோ அது நீயே...
நீயும் நானும் ஒன்றுதான் ... எங்கே பிரிவது..? ”
.
(John Durai Asir Chelliah