Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு

Friday 19th May 2017 09:21 AM

Case filed against Karthi Chidambaram

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு முதலீடுகளைப் பெற சட்டவிரோதமாக அனுமதி அளிக்க இலஞ்சம் பெற்றுக் கொண்டதாக கார்த்தி சிதம்பரத்தின் மீது முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டை அடுத்து மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கார்த்தி சிதம்பரத்தின் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மீண்டும் சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகங்களில் மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்நிலையில், மத்திய புலனாய்வு துறை பதிவு செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் அமலாக்கத்துறை கார்த்தி சிதம்பரத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இதேவேளை, கார்த்தி சிதம்பரம் தற்சமயம் லண்டனில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.