Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

சசிகலா புஷ்பாவின் ஒளிப்பட விவகாரம்: 15 பேர் மீது வழக்கு பதிவு

Friday 19th May 2017 09:19 AM

Sasikala Pushpa's video controversy: 15 cases filed

நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் ஒளிப்படத்தை தவறாக பயன்படுத்தியதாக தெரிவித்து, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்பட, 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனது ஒளிப்படத்தை தவறாக பயன்படுத்தியதாக தெரிவித்து சசிகலா புஷ்பா டெல்லி பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்தே, குறித்த 15 பேர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் தன்னை இழிவு படுத்தி சிலர் சமூக வலைத்தளங்களில் தவறான பதிவுகளை வெளியிட்டிருந்ததாக சசிகலா புஷ்பா முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த டெல்லி பொலிஸார், சசிகலா புஷ்பாவை நேரில் அழைத்து வாக்குமூலம் பெற்றுக் கொண்டனர். இதன்போது, ஒளிப்பட ஆதாரங்கள், தொலைபேசி உரையாடல்கள் சந்தேகப்படும் நபர்களின் பட்டியல் போன்றவற்றை சசிகலா புஷ்பா பொலிஸாரிடம் கையளித்தார்.

இதனடிப்படையில், தமிழக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, இராதாபுரம் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை, சசிகலா புஷ்பாவின் முன்னாள் உதவியாளர் பாலமுருகன், சாத்தான்குளம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஆனந்த்ராஜ், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் துணைத்தலைவர் சின்னதுரை, பிரியங்கா, காவ்யா, ஜெயராம், ராமு, கண்ணன் உள்ளிட்ட 15 பேர் மீது டெல்லி இணைய குற்ற தடுப்புப்பிரிவு பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.