Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

மதுபானக் கடையை முற்றுகை

Tuesday 18th Apr 2017 16:35 PM

இந்தப் போராட்டத்தால், அந்தப் பகுதி போர்க்களமாக மாறியது

மதுரை மாவட்டம் பொய்கரைப்பட்டியில், பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் மனநல மருத்துவமனை ஆகிய இரண்டுக்கும் அருகே, ஒரு மதுபானக் கடை . அந்த மதுக்கடையை மூட வலியுறுத்தி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர்.ஆனால், அவர்களது போராட்டங்களை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. கடை எப்போதும் போலவே இயங்கிவந்தது. இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், அந்த மதுபானக் கடையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில், அந்த மதுக்கடையை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். மாணவர்களும் அந்த பகுதி மக்களும் மதுக்கடையை சூறையாட, இதைத் தடுக்க வந்த மதுபானக்கடை ஊழியர்களையும் போராட்டக்காரர்கள் அடித்துவிரட்டனர். இந்தப் போராட்டத்தால், அந்தப் பகுதி போர்க்களமாக மாறியது......