Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை

Tuesday 18th Apr 2017 16:27 PM

தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் சிலையை பராமரிக்க முடிவு செய்யப்பட்டு 1.17 கோடி ரூபாய் நிதி

திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூச சாரம் அமைக்கும் பணி துவக்கம். (கன்னியாகுமரி, 18.4.2017)

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணிக்காக சாரம் அமைப்பதற்கு இரும்பு கம்பிகள் கொண்டு செல்லும் பணி நேற்று தொடங்கியது.

கன்னியாகுமரி சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை ஒட்டியுள்ள கடல் பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை திறக்கப்படது. சிலை திறந்த வெளியில் நிற்பதால் நான்கு பக்கம் வீசும் கடற்காற்றினாலும், மழை, வெயில் போன்றவைகளால் நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட சிலை பகுதி மற்றும் மண்டபம், யானை சிற்பங்கள் போன்றவை பாதிக்கப்பட்டதால் 5 ஆண்டுக்கு ஒருமுறை சிலை முழுவதும் சுத்தம் செய்து உலக தரம் வாய்ந்த ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம்.

இந்நிலையில் தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் சிலையை பராமரிக்க முடிவு செய்யப்பட்டு 1.17 கோடி ரூபாய் நிதியினை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் முதல் கட்டமாக 87 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நேற்று துவங்கின.

முதல்கட்டமாக சிலையை சுற்றி இரும்பு சாரம் அமைப்பதற்காக இரும்பு கம்பிகள் கொண்டு செல்லும் பணி நடந்தது. பூம்புகார் படகு துறையில் இருந்து கம்பிகள் ஏற்றப்பட்டு படகில் கொண்டு செல்லப்பட்டது. இரும்பு கம்பிகள் ஏற்றிய படகினை கொடியசைத்து மாவட்ட சுற்றுலா அதிகாரி நெல்சன் துவக்கி வைத்தார்.