Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசிய வைகோ 27-ந்திகதி வரை சிறை

Monday 17th Apr 2017 20:53 PM

புழல் சிறையில் அடைக்கப்பட்ட வைகோ, இன்று(17) மீண்டும் அதே வழக்கின் விசாரணைக்காக எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தேச விரோத வழக்கில் கைதாகி உள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை 27-ந்திகதி வரை சிறையில் அடைக்க எழும்பூர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

சென்னை ராணிசீதை மகாலில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 15ந் திகதி குற்றம் சாட்டுகிறேன் என்ற ஆங்கில மொழியில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகத்தை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டு பேசினார்.

அப்போது விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக வைகோ மீது தேச விரோத வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு எழும்பூர் 13வது குற்றவியல் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கு கடந்த 4-ந்திகதி விசாரணைக்கு வந்தபோது, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேரில் ஆஜராகி இருந்தார். அப்போது இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் அல்லது இந்த வழக்கில் தன்னை சிறையில் அடைக்க வேண்டும் என்று வைகோ கோரிக்கை விடுத்தார்.

அவரை ஜாமீனில் செல்லும்படி கோர்ட்டு கேட்டுக் கொண்டதை அவர் ஏற்கவில்லை. இதையடுத்து, இந்த வழக்கில் அவர் 15 நாட்கள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு கோபிநாத் உத்தரவிட்டார்.

இதன்படி புழல் சிறையில் அடைக்கப்பட்ட வைகோ, இன்று(17) மீண்டும் அதே வழக்கின் விசாரணைக்காக எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, இந்த தேச விரோத வழக்கை விசாரிக்கும் அதிகாரம் செசன்சு கோர்ட்டுக்கு தான் உள்ளது அதனால், இந்த வழக்கை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுக்கு மாற்றி, எழும்பூர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். மேலும், வைகோவை வருகிற 27ந் திகதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.