Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

சசிகலாவின் பல மர்மங்கள் வெளியாகும்

Monday 17th Apr 2017 20:49 PM

சி.ஆர்.சரஸ்வதி மற்றும் பா.வளர்மதி இருவரும் ஓபிஎஸ் அணியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகளாக தங்களை காட்டிக் கொண்ட நடிகையும் அதிமுக-வின் நட்சத்திர பேச்சாளருமான சி.ஆர்.சரஸ்வதி மற்றும் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோர் தற்போது சசிகலாவின் தீவிர விசுவாசிகளாக இருக்கிறார்கள்.

சசிகலாவை அன்போடு சின்னம்மா…சின்னம்மா…என்று அழைக்கும் இவர்கள் அவருக்கு ஆதரவாக பல மேடைகளில் பேசிக்கொண்டிருக்க, தற்போது சத்தமே இல்லாமல் ரொம்பவே சைலண்டாகியுள்ளார்கள்.

இந்த நிலையில், சசிகலா அணியில் இருந்து விலக முடிவு செய்துள்ள சி.ஆர்.சரஸ்வதி மற்றும் பா.வளர்மதி இருவரும் ஓபிஎஸ் அணியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் அணிக்கும் சி.ஆர்.சரஸ்வதியும், பா.வளர்மதியும் சென்றால், சசிகலாவின் பல மர்மங்கள் வெளியாகும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...........