Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

இனிய நந்தவனம்” மாத இதழின் இருபதாம் ஆண்டு விழாக் கூட்டம்!

Wednesday 11th Jan 2017 05:38 AM

”இனிய நந்தவனம்” மாத இதழின் இருபதாம் ஆண்டு விழாக் கூட்டம், இதழாசிரியர் திரு. சந்திரசேகரன் அவர்களின் நன்றி வெளிப்பாட்டுடன் கூடிய வரவேற்புரையுடன் இனிதே தொடங்கியது.

”இனிய நந்தவனம்” மாத இதழின் இருபதாம் ஆண்டு விழாக் கூட்டம், இதழாசிரியர் திரு. சந்திரசேகரன் அவர்களின் நன்றி வெளிப்பாட்டுடன் கூடிய வரவேற்புரையுடன் இனிதே தொடங்கியது.

முன்னதாக, பாரதியார் பாடல்களுக்கு அழகாக அபிநயம் பிடித்து, பரத நாட்டிய முத்திரைகளை முறையாகப் பதித்து ஒரு பேராசிரியர் நடனமாடியது வெகு சிறப்பு.

கனடா ‘உதயன்’ லோகேந்திரன் அவர்கள், அயலகத்தில் நந்தவனம் பற்றித் தூய தமிழில் மிக அழகாக, விளக்கமாக உரையாற்றினார்.

ஆரம்பமே அதிரடியாய், திரு. தங்கர் பச்சான் அவர்களின் உரை வீச்சு. பாராட்டுகளைத் தாண்டித் திறனாய்வின் அவசியத்தையும், ஈழத் தமிழர்களின் மீதான வன்கொடுமைகள் குறித்த அவரது பார்வையையும், இன்றைய குழந்தைகளுக்கு வாசிப்பின் தேவையையும் ஒரு தார்மீகக் கோபத்துடன் அவரது பாணியில் பேசினார்.

ஆசிரியர் சமுதாயத்தின் மீதான அவரது கருத்துகள் நெருடல் ; மாற்றத்தைப் பெற வேண்டிய நிலையில்... இன்று பல ஆசிரியர்கள் சமூக நோக்குடன் பயணித்துக் கொண்டுள்ளோம்.

காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார் அவர்களின் காக்கிச் சட்டைக்குள் கட்டுண்ட தமிழ் இலக்கிய வாசிப்பு, அணை கடந்த ஆறெனப் பாய்ந்ததில்,
தமிழமுதன்றோ பருகினோம்!

கவிஞர் தங்கம்மூர்த்தி அவர்களின் உரை நகைச்சுவை, நூலாசிரியர் வாழ்த்து, பள்ளிச்சூழல் எனப் பஞ்சாமிர்தமாய் இன்னும் காதுகளில் பாய்ந்து கொண்டிருக்கிறது.

பல்துறை சாதனையாளர்களுக்கும் விருதுகள் வழங்கி, சிறப்புச் செய்யப்பட்டது. வழக்கம் போல் திரு. மழபாடி ராஜாராம் ஐயா அவர்களின் நன்றியுரையுடன் விழா சிறப்பாக நிறைவுற்றது.