Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

ஜெயலலிதா சமாதியில் அதிமுக பெண் தொண்டர் விஷம் குடித்து தற்கொலை

Tuesday 10th Jan 2017 11:59 AM

அந்த பெண்ணின் வாயில் இருந்து நுரை வெளியேறியது. உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

ஜெயலலிதா சமாதிக்கு இன்று காலை வந்த, 60 வயது அதிமுக பெண் தொண்டர் ஒருவர் திடீரென விஷம் குடித்தார். மயங்கிக் கிடந்த அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார். முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 5ம்தேதி அவர் இறந்தார். மறுநாள் 6ம்தேதி எம்ஜிஆர் சமாதியின் பின்புறம் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான அதிமுக தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் தினந்தோறும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பெண் ஒருவர், ஜெயலலிதா சமாதியில் பூக்கள் தூவி அஞ்சலி செலுத்தி விட்டு வந்தபோது மின்சாரம்  பாய்ந்து விழுந்தார்.

பின், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.   இதைத் தொடர்ந்து, இன்னொரு நாளில் 40  வயது மதிக்கத்தக்க ஒருவர், ஜெயலலிதா சமாதிக்கு வந்து, ‘சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி,  விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டார். உடனடியாக அவரை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில், நேற்றும் ஏராளமான மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினர். அப்போது, 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கிய நிலையில் சமாதியின் பின்புறத்தில் கிடந்ததை சிலர் கவனித்தனர்.

அந்த பெண்ணின் வாயில் இருந்து நுரை வெளியேறியது. உடனடியாக இதுகுறித்து  போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த அண்ணா சதுக்கம் போலீசார் அங்கு மயங்கிய நிலையில் கிடந்த  பெண்ணின் முகத்தில் தண்ணீர் தெளித்து விசாரித்தனர். பேச முடியாத நிலையில் இருந்த அந்த பெண்ணை 108 ஆம்புலன்சில் கொண்டு சென்று  சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் நேற்று நள்ளிரவு பரிதாபமாக இறந்தார். இந்த பெண்ணுக்கு எந்த ஊர் என தெரியவில்லை.

ஆனால் அதிமுக தொண்டர் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணின் புகைப்படத்தை வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.