Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

பொங்கல் விடுமுறை நீக்கப்படவில்லை: தமிழிசை சவுந்தரராஜன்

Tuesday 10th Jan 2017 08:02 AM

கோவை கொடிசியா வளாகத்தில் இன்று எல்.பி.ஜி. கியாஸ் விநியோகஸ்தர்களின் 30-வது ஆண்டு விழா மற்றும் கருத்தரங்கு நடக்கிறது.

கோவை கொடிசியா வளாகத்தில் இன்று எல்.பி.ஜி. கியாஸ் விநியோகஸ்தர்களின் 30-வது ஆண்டு விழா மற்றும் கருத்தரங்கு நடக்கிறது. இதில் கலந்து கொள்ள பா.ஜனதா தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை வந்தார்.

முன்னதாக கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொங்கல் பண்டிகை கடந்த 15 ஆண்டுகளாக சிறப்பு பட்டியலில் தான் உள்ளது. பொங்கல் பண்டிகை எந்த பட்டியலில் இருந்தும் நீக்கப்படவில்லை. முழுமையாக புரிந்து கொள்ளாமல் சில அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

வரும் பொங்கல் பண்டிகை சனிக்கிழமை வருகிறது. விடுமுறை தினத்தில் பண்டிகை வருவதால் பொங்கல் விடுமுறையை மற்றொரு நாளில் எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது. இது தான் உண்மை நிலவரம்.

இது சரியாக புரிந்து கொள்ளாமல் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவது கண்டனத்துக்குரியது.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு ஆணை பிறப்பிக்கலாம். கடந்த ஆண்டு மத்திய அரசு வழங்கிய ஆலோசனைபடி மாநில அரசு தங்கள் அதிகாரத்துக்குட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழக பா.ஜனதா துணை நிற்கும். சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு நடந்தால் மகிழ்ச்சி. தடையை மீறி நடத்தப்பட்டாலும் பா.ஜனதா உணர்வு பூர்வமான ஆதரவை அளிக்கும்.

தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை, இறப்புகள் அதிகரித்துள்ளது. இது வருந்தத்தக்கது. வறட்சியால் பாதிக்கப்பட்ட 13 லட்சம் ஏக்கருக்கு பாரத பிரதமரின் காப்பீட்டு திட்டம் மூலம் இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

மத்திய அரசு, தமிழக அரசு மீது முழு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. சில அரசியல் சூழ்ச்சியால் திசை திருப்பப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.