Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

மக்கள் திலகம் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா எழுச்சியுடன் நடைபெற்றது!

Tuesday 10th Jan 2017 05:49 AM

ஊத்தங்கரை நகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திரும்பிய திசையெங்கும் எம்ஜிஆரின் பிரமாண்டமான பேனர்கள் ,

8 - 1 - 2017 அன்று ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் - ஊற்றங்கரை நகர வளர்ச்சி அறக்கட்டளை இணைந்து நடத்திய மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவினை எழுச்சியுடன் நடத்தினர் .

ஊத்தங்கரை நகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திரும்பிய திசையெங்கும் எம்ஜிஆரின் பிரமாண்டமான பேனர்கள் , சுவரொட்டிகளைக் கண்டு வியந்து போனேன் .காலை 9 மணி அளவில் தொடங்கிய விழா மதியம் 3 மணிக்கு நிறைவு பெற்றது .

விழாவில் அதிமுக , திமுக , காங்கிரஸ் , விடுதலை சிறுத்தைகள் இப்படி அனைத்து அமைப்பினரும் விழா முடியும்வரை இருந்தது சிறப்பு .

விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய திரு .பழனி பெரியசாமி , எம்ஜிஆர் படத்தைத் திறந்து வைத்த நண்பர் இதயக்கனி விஜயன் , தலைமையேற்ற ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு .வே.சந்திரசேகரன் ஆகியோர் உரை சிறப்பாக இருந்தது .

முகநூலில் மட்டுமே என்னை அறிந்து , இந்த எழுச்சி மிக்க விழாவில் என்னை சிறப்புரை ஆற்ற அழைத்த ஊத்தங்கரை விடுதலை வாசகர் செயலர் நண்பர் பழ.பிரபு , நண்பர் ஆடிட்டர் சே.லோகநாதன் ஆகியோரின் அன்பும் , அவர்கள் என்மீது வைத்துள்ள பற்றும் நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கும் .