Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

காஷ்மீரில் பலத்த சண்டை! தீவிரவாதி பலி

Tuesday 10th Jan 2017 04:12 AM

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பன்டிப்போரா மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்பு படையினருடன் நிகழ்ந்த துப்பாக்கி

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பன்டிப்போரா மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்பு படையினருடன் நிகழ்ந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டமை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பன்டிப்போரா மாவட்டத்தின் வடபகுதியில் உள்ள பர்ராய் மொஹல்லா பகுதியில் முக்கிய தீவிரவாதி ஒருவன் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மாநில காவல் துறையின் தீவிரவாத ஒழிப்பு சிறப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்த இடத்தில் உள்ள ஒரு வீட்டை இன்று அதிகாலை சுற்றிவளைத்தனர்.

அவர்களை கண்டதும் அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினான். பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தினர்.

இருதரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற கடுமையான துப்பாக்கிச் சண்டையில் அந்த தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். சுட்டுக் கொல்லப்பட்டவன் எந்த தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவன் என்ற உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.