Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

90 மாணவிகளை பாலியல் வன்கொடுமை

Wednesday 20th Sep 2017 15:20 PM

பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிவாரணம்

மதுரை புதூர் லூர்து நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. அவர், 2011-ல் மதுரை பொதும்பு அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது 90 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்றுவந்தது. 2017-ம் ஆண்டு முதல் வழக்கு மதுரை மாவட்ட வன்கொடுமைத் தடுப்புப் பிரிவில் நடைபெற்றுவந்தது. அதில் 24 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தது நிரூபிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம், தலைமை ஆசிரியர் ஆரோக்கிய சாமிக்கு 55 வருட சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிவாரணமும் வழங்க உத்தரவிட்டார்.

அதனையடுத்து ஆரோக்கியசாமியைச் சிறைக்கு அழைத்துச்சென்றனர். அப்போது சிறை வளாகத்திலிருந்த வழக்கறிஞர்கள், பொதுமக்கள் ஆரோக்கியசாமி மீது முட்டை வீசி, செருப்படி கொடுத்தனர்.