Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு இடைக்காலத் தடை: பெங்களூரு உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

Tuesday 12th Sep 2017 07:51 AM

AIADMK meeting to decide on interim bail

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சார்பில் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள, அதிமுக பொதுக் குழு கூட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து பெங்களூரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சார்பில் நாளை அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சென்னை வானகரம் பகுதில் நடந்து வரும் நிலையில், பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் 8ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், “அதிமுக சர்ச்சை, தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கிறது. அதிமுக அம்மா அணி, புரட்சித் தலைவி அம்மா அணி விவகாரம் இன்னும் முடியவில்லை. இத்தகைய சூழலில் இதில் நீதிமன்றம் தலையிட்டு அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க எவ்வித சட்ட முகாந்திரமும் இல்லை. எனவே, நாளை (செப். 12) நடைபெறும் பொதுக்குழுவுக்கு தடை விதிப்பதற்கில்லை. இந்த சிக்கல்கள் தெரிந்திருந்தும் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் வழக்கு தொடர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேலுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது” என்று தீர்ப்பளித்தது.

இதனிடையே, அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தினகரன் ஆதரவாளரும் கர்நாடக மாநில அதிமுக செயலாளருமான புகழேந்தி பெங்களூரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ”அதிமுக பொதுச் செயலாளரான வி.கே.சசிகலாவுக்கும் துணை பொதுச் செயலாளரான டிடிவி தினகரனுக்கும் மட்டுமே அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டும் அதிகாரம் உள்ளது. ஆனால், அவர்கள் பொதுக்குழுவுக்கோ செயற்குழுவுக்கோ யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. இந்நிலையில் செப்டம்பர் 12-ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தை நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் ஆகியோரின் அனுமதியின்றி இக்கூட்டத்தைக் கூட்ட யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை.எனவே, பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இம்மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘’அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அக்டோபர் 13-ம் தேதி மீண்டும் விசாரணை நடைபெறும்” என்று உத்தரவிட்டார்.

நாளை (செப்டம்பர் 12) ஈபிஎஸ், ஓபிஎஸ் சார்பில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட இருந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட இடைக்கால தடை விதித்திருப்பது குறிப்பிடத்தகக்து.