Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

விநாயகர் ஆட்டிறைச்சி சாப்பிடும் விளம்பரம்: நிறுவனம் மீது நடவடிக்கை; இந்தியாவிடம் ஆஸ்திரேலியா உறுதி!

Tuesday 12th Sep 2017 07:47 AM

Vinayagar eating mutton advertising: action on the company; Australia confirmed to India

விநாயகர் ஆட்டு இறைச்சி சாப்பிடுவது போன்ற ஆஸ்திரேலியா விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த விளம்பரத்தைத் தடை செய்யக்கோரியும், அதனை தயாரித்த விளம்பர நிறுவனத்தின்மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆஸ்திரேலிய அரசிடம் இந்தியா புகார் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டில் ஆட்டிறைச்சி விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் அந்நாட்டின் ‘இறைச்சி மற்றும் கால்நடை ஆய்வுகள் நிறுவனம்’, ஒரு விளம்பரத்தை சமீபத்தில் வெளியிட்டது. அதில், விருந்து நடக்கும் இடத்தில் இந்துக் கடவுள் விநாயகர், ஏசு, புத்தர், சீசர் என்று அனைவரும் ஒரே மேஜையில் அமர்ந்து பேசுகிறார்கள். அப்போது, அனைவரும் சேர்ந்து ஒயின் குடித்துக்கொண்டே, இறைச்சியையும் உண்பது போன்று காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த விளம்பரம் வெளியான முதலே உலகம் முழுவதும் பல்வேறு இந்து அமைப்புகளிடம் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. அந்த கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், கேன்பெராவில் உள்ள இந்தியத் தூதரகம் சார்பில், அந்த விளம்பரத்தைத் தடை செய்யக்கோரியும், அதனை தயாரித்த விளம்பர நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆஸ்திரேலிய அரசிடம் புகார் தரப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அந்த விளம்பர நிறுவனம்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்று இந்தியா தெரிவித்துள்ளது.