Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

வைரலாகும் கேரள பெண்களின் ஜிமிக்கி கம்மல் நடனம்!

Sunday 10th Sep 2017 07:38 AM

Diamond is the dance of Jimmy Kamal of Kerala women!

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டர்கிராம் என அனைத்து சமூக ஊடகங்களில் வைரலாக பரவி கொண்டிருக்கிறது ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடிய கேரள கல்லூரி பெண்கள்  நடனம்.

கேரளாவில் உள்ள ISC  கல்லூரியைச் சேர்ந்த பெண்கள் ஒணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘வெலிபாடிண்டே புஸ்தகம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர்.

தற்போது இந்த நடனம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

நெடிசன்கள் ஸ்டேடஸ்களாலும், மீம்ஸ்களாலும் இந்த பெண்களின் நடனத்தை தினமும் ட்ரண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தமிழக இளைஞர்கள் பலர் இப்பெண்களின் நடனத்தைக் பகிர்ந்து தமிழ்ப் பெண்களை வம்புக்கிழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

யூ டியூப்பில் இந்த வீடியோவை சுமார் 47 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கண்டிருக்கிறார்கள். 50,000க்கும் அதிகமானவர்கள் விருப்பம் குறியிட்டிருக்கிறார்கள். 1,000க்கு மேற்பட்டவர்கள் பதிவிட்டிருக்கிறார்கள்.