Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

மாட்டு இறைச்சி பட்டியலில் ஏன் கோழி சேர்க்கப்படவில்லை? – உச்ச நீதிமன்றம்

Saturday 12th Aug 2017 05:43 AM

Why is not the chicken in the meat meat list? - Supreme Court

இறைச்சிக்காக மாடுகளை வாங்கவோ, விற்கவோ தடை விதித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில் கோழிகளை சேர்க்காததன் உள்நோக்கம் என்ன? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

குறித்த அறிவிப்பிற்கு எதிரான வழக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதன் போதே இவ்வாறு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதன்போது, மத்திய அரசின் அறிவிக்கையில் உள்ள கால்நடை சந்தை பிரிவுக்கு மட்டுமாவது விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நரசிம்மா, கேட்டுக்கொண்டார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், விலங்குகளை கொடுமைப்படுத்துவதை கட்டுப்படுத்துதல் என்ற பெயரில் மத்திய அரசு சந்தையில் நுழைவதை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதை தடை செய்யும் அறிவித்தலுக்கு தடை விதித்து மதுரை உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த தீர்ப்பை இரத்து செய்ய முடியாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தடைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை விதித்து உள்ள தடை தொடரும் என்றும் இந்த தடை நாடு முழுவதும் பரவலாக அமுலில் இருக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.