Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

சூடுபிடிக்கும் அரசியல் களம்: ஆட்டத்தினை ஆரம்பிக்கும் சசிகலா அணி

Saturday 12th Aug 2017 05:40 AM

Heavy political field: Sasikala team that starts the game

அ.தி.மு.கவிற்குள் உட்பூசல்கள் அதிகமாகி உச்சகட்ட மோதல்கள் வெடித்துவரும் நிலையில் தினகரன் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

அதன் முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டு ஆதரவு திரட்டும் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ள தினகரன் எதிர்வரும் 14ஆம் திகதி மதுரையில் மாபெரும் கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளார்.

ஆரம்பத்தில் குறித்த கூட்டத்திற்கு பொலிஸார் அனுமதி மறுத்து வந்த நிலையில், அ.தி.மு.க. அம்மா அணியின் நகர செயலாளர் சரவணன் மதுரை உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தினகரன் ஆதரவாளர்களினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அ.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக செயற்பட தினகரனுக்கு அனுமதியில்லை என பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ் அணியினர் இணைந்து தீர்மானம் எடுத்துள்ள நிலையில் தினகரன் தன் பக்கம் ஆதரவு திரட்டுவதில் மும்முரமாகியுள்ளமையும், சசிகலாவின் சகோதரன் திவாகரன், தினகரனுக்கு ஆதரவுகளை தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.