Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

முரசொலி பவள விழா அரங்கம் திறப்பு!

Friday 11th Aug 2017 03:59 AM

Murasoli Coral festival opening ceremony

முரசொலி இதழ் பவளவிழாவுக்காக சென்னையில் அமைக்கப்பட்ட காட்சி அரங்கம் திறக்கப்பட்டது. 



தி.மு.க.வின் அதிகாரப்பூா்வ நாளேடான முரசொலி நாளிதழ் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆனதையொட்டி கோடம்பாக்கம் சாலையில் உள்ள  முரசொலி அலுவலகத்தில், முரசொலி பவள விழா காட்சி அரங்கத்தை  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மற்றும் இந்து என்.ராம், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் ஆகியோர் திறந்து வைத்தனர். அதன் பின்னர் முரசொலி  புகைப்பட கண்காட்சியினை அவர்கள் பார்வையிட்டனர்.