Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

எல்லையோர கிராமத்திலிருந்து பொதுமக்கள் வெளியேற இந்திய ராணுவம் உத்தரவு!

Friday 11th Aug 2017 03:56 AM

Indian Army orders release of civilians from border villages

 

சீனாவுடன் டோக்லாம் பிரச்னை நீடித்து வரும் நிலையில், எல்லையோர கிராமத்திலிருந்து பொதுமக்கள் வெளியேற இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

சிக்கிம் மாநிலத்தின் நாதங் கிராமம், சர்ச்சைக்குரிய டோக்லாம் பகுதியில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. டோக்லாம் எல்லை பிரச்னையில் கடந்த 2 மாதங்களாக, இந்தியா - சீனா இடையே நாளுக்கு நாள் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், நாதங் கிராமத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு, இந்திய ராணுவம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சுக்னா என்னுமிடத்தில் இருந்து 33-வது படைப்பிரிவை சேர்ந்த ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்களை, டோக்லாம் நோக்கி நகருமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவுடனான போருக்கு கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது என, சீன அரசு பத்திரிகையில் நேற்று செய்தி வெளியானது. இந்தியா - பூடான் இடையிலான ஒப்பந்தத்திற்கு உட்பட்ட டோக்லாம் பகுதியில் இருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும், என்று சீனா பிடிவாதமாக உள்ள நிலையில், எல்லையில் இருதரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டிருப்பதால் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.