Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

குடியரசுத் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஹமீது அன்சாரி இன்றுடன் ஓய்வு!

Friday 11th Aug 2017 03:54 AM

Hameed Ansari to resign today as vice president

குடியரசுத் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஹமீது அன்சாரி இன்றுடன் ஓய்வு பெற்றார்.

தொடர்ந்து 2-வது முறையாக குடியரசுத் துணைத் தலைவர் பதவியை வகித்த ஹமீது அன்சாரி இன்றுடன் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். முன்னதாக மாநிலங்களவையில் இன்று பிரிவு உபசார விழா நடைபெற்றது. 
இதில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த எம்.பிக்களும் ஹமீது அன்சாரியின் சேவைகளை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தனர். மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹமீது அன்சாரியிடமிருந்து பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டதாகக் கூறினார். 

நாட்டின் வளர்ச்சிக்காக இரவு பகலாக பாடுபட்டவர் ஹமீது அன்சாரி என்றும் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.