Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

Prime Minister confirms caste, non-communal India

Wednesday 09th Aug 2017 10:52 AM

சாதியம், மதவாதம் அற்ற இந்தியாவை உருவாக்க பிரதமர் உறுதி

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஏழ்மை, மாசுபாடுகள், ஊழல், பயங்கரவாதம், சாதியம், மதவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே தமது கனவு என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின் 75 ஆம் ஆண்டு விழா இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் கொண்டாடப்பட்ட நிலையில் அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மோடி மேற்படி தெரிவத்துள்ளார்.

இதன்போது, மகாத்மா காந்தியின் ‘முழக்கம் செய் அல்லது செத்துமடி’ என்ற வாசகத்தை பின்பற்றி நாட்டு மக்கள் பல தியாயங்களை செய்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், நாடு ஒன்றுபடும் போதே தடைகள் யாவும் நீங்கி சுதந்திரம் பெற முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வறுமை, கல்வி, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை தற்போது கண்முன்னே உள்ள சவால்கள் என்றும் ஒரே இலக்கை நோக்கி போராடினால் வெற்றி பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.