Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

துணை சபாநாயகர் தமிழில் பேசியதால் நாடாளுமன்றில் சர்ச்சை

Wednesday 09th Aug 2017 10:50 AM

Deputy Speaker speaks in Tamil and controversies in Parliament

நாடாளுமன்ற நிகழ்வு ஒன்றில் துணை சபாநாயகரும் அ.தி.மு.க. உறுப்பினருமான தம்பிதுரை தமிழில் பேசியதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 1942 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் மிகவும் முக்கியமாக போராட்டமாக கருதப்படுகின்றது.

இந்த போராட்டத்தின் 75 ஆவது ஆண்டுவிழா இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் கொண்டாடப்பட்ட நிலையில் குறித்த நிகழ்வில் தம்பிதுரை தமிழில் உரையாற்ற ஆரம்பித்துள்ளார்.

இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டதுடன் தம்பிதுரை தமிழில் உரையாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர்கள்  கூச்சலிட்டனர். இவ்வாறு நாடாளுமன்ற துணை சபாநாயகர் தமிழில் பேசுவதற்கு ஏனைய உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்தமையானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.