Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

தமிழக மீனவர்களின் கைது இலங்கை கடற்படையின் காட்டுமிராண்டித்தனம்: ஸ்டாலின்

Wednesday 09th Aug 2017 10:49 AM

The arrest of Tamil fishermen The brutality of the Sri Lankan navy: Stalin

தமிழக மீனவர்களை தாக்கி அவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படையினரின் செயல் காட்டுமிராண்டித்தனமானது என தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க. செயல்தலைவருமான மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று (புதன்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ ஒரே நாளில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 49 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களை கைது செய்தது மாத்திரமின்றி அவர்களுடைய இரண்டு படகுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படையினரின் இத்தகைய அராஜக நடவடிக்கைகளுக்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டங்களை தெரிவித்துக் கொள்;கின்றேன். இவ்வாறு மீனவர்களை அரக்கத்தனமாக தாக்கி அவர்களின் படகுகளை உடைத்து நாசமாக்குவது நட்பு நாடு என்று கூறும் இலங்கைக்கு அழகு அல்ல. மீனவக் குடும்பங்களை நிலைகுலைய வைக்கும் இதயமற்ற நடவடிக்கை. எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய அரசு ஆரம்பித்துள்ள ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்திற்கு பாதகம் ஏற்படுத்தும் செயலாகவே இலங்கை கடற்படையின் செயற்பாடுகள் அமைந்துள்ளது.

கண்மூடித்தனமாக இடம்பெற்றுள்ள இந்த கைது நடவடிக்கை புதுக்கோட்டை மாவட்டத்தில் மீனவர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது. எனவே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட 49 மீனவர்களையும் சேர்த்து இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 64 மீனவர்களையும் அவர்களின் 125 படகுகளையும் விடுவிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தூதரக ரீதியில் இலங்கை அரசுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.