Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இந்தியச் செய்திகள்

மீனவர்கள் 53 பேரை கைதுசெய்தது..!

Tuesday 08th Aug 2017 20:22 PM

இந்தியாவின் மேல் கடுப்படைந்த சிறிலங்கா...!


வஞ்சம்தீர்க்க புதுக்கோட்டை மீனவர்கள் 53 பேரை கைதுசெய்தது..!

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய ஈழத்தமிழர் நட்பு உறவுமையம் நடாத்திய தமிழீழம் தமிழர்தாயகம் என்ற மானாடே இந்த கைதுகளுக்கான காரணமாக இருக்கின்றது.
அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்று குற்றம்சாட்டி 53 இந்திய புதுக்கோட்டை மீனவர்களை கைது செய்துள்ளது ஶ்ரீலங்கா கடற்படை.
ஶ்ரீலங்கா கடற்படையினரின் கப்பல், மீனவர்களின் படகுடன் மோதியதால் கடற்படைக்கும், புதுக்கோட்டை மீனவர்களுக்கும் இடையே நடுக்கடலில் நேற்று இரவு மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, புதுக்கோட்டை, மண்டபம், இராமேஸ்வரம் பகுதிகளைச் சேர்ந்த 53 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்களிடமிருந்து 10க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.

எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகவும், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தியதாகவும் மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

"புனித பூமி"