Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

சினிமா செய்திகள்

அரசியல் பற்றி எதுவும் கேட்க வேண்டாம்: ரஜனிகாந்த்

Friday 19th May 2017 09:29 AM

Do not ask anything about politics: Rajinikanth

அரசியல் பிரவேசம் குறித்து நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் பதிலுக்காக பலரும் காத்திருக்கின்ற நிலையில், அரசியல் பற்றி தன்னிடம் எதுவும் கேட்க வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

4-வது நாளான இன்றும் (வியாழக்கிழமை) இரசிகர்களை சந்திப்பதற்காக ரஜனிகாந்த், ராகவேந்திரா மண்டபத்திற்கு விஜயம் செய்தார். இதன்போது அங்கிருந்த செய்தியாளர்கள் அவருடைய அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பியபோதே இவ்வாறு பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்-

“அரசியலுக்கு வருவது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. எனது கருத்தை ஏற்கனவே தெளிவாக கூறி விட்டேன். அரசியல் பற்றி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம். அரசியல் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.

இரசிகர்கள் தங்களது குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். இரசிகர்களுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இரசிகர்களுடன் செலவிட்ட தருணங்களை மறக்க முடியாது, மீண்டும் அவர்களை சந்திக்க பெரும் ஆவலோடு காத்திருக்கிறேன். மேலும் அடுத்த இரசிகர் சந்திப்பு பற்றிய விபரங்களை விரைவில் வெளியிடுவேன்” என்று கூறியுள்ளார்.

ரஜனிகாந்த் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பது தொடர்பில் இரசிகர்கள் மட்டுமன்றி அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா துறையினர் பலரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியாக இரசிகர்களை சந்திக்க வரும் ரஜனிகாந்த், இறுதி நாளான நாளைய தினம் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.