Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

சினிமா செய்திகள்

இயக்குனராக களமிறங்கும் கங்கனா ரணாவத்

Friday 19th May 2017 09:27 AM

Ganga Ranawat is the director

தமிழில் ஜெயம் ரவி நடித்த “தாம் தூம்” படத்தில் நடித்த நடிகை கங்கனா ரணாவத் பொலிவூட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவர் தற்போது ஜான்சி ராணியின் வாழ்க்கை படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்தவகையில் இதுவரைக்காலமும் நடிகையாக வலம் வந்த கங்கனா ரணாவத் இயக்குனராகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து கங்கனா ரணாவத் கருத்து தெரிவிக்கையில், ‘விரைவில் நான் ஒரு படத்தை இயக்க உள்ளேன். அதில் நானே கதாநாயகியாகவும் நடிக்க உள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தான் இயக்கவுள்ள படம் தொடர்பாக இரண்டு தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், அதற்கான பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.