Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

சினிமா செய்திகள்

திரையரங்குகளில் தேசியகீதம்

Wednesday 19th Apr 2017 17:22 PM

தியேட்டரில் இருப்பவர்கள் அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்கவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

திரையரங்குகளில் திரைப்படத்தை ஒளிபரப்புவதற்கு முன்னதாக தேசியகீதம் இசைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. தேசிய கீதம் இசைக்கப்படும்போது தியேட்டரில் இருப்பவர்கள் அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்கவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நாடு முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த தீர்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அளிக்கப்பட்ட விலக்கில், மேலும் சில பிரிவு மாற்றுத்திறனாளிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, பெருமூளை வாதம், தசைநார் தேய்வு, ‘Parkinsons’ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் இதில் இணைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிபரப்பப்படும்போது, இனி இவர்கள் எழுந்து நிற்கத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.